Rock Fort Times
Online News

செல்போன் டவரையும் விட்டு வைக்காத மர்ம கும்பல்- ரூ.20 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு…!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவன அதிகாரிகள் அந்த செல்போன் டவரை சரி பார்த்தபோது அதிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தாஜ்மல்ஹான் என்பவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 5-வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் டவரில் இருந்த மின்சாதன பொருட்களை திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்