Rock Fort Times
Online News

மணப்பாறை பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று ( 20.08.2023 ) கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்கள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வாழைப்பழம், தேங்காய், பழங்கள், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை வளநாடு பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், அந்த சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். அதை பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை கொடுக்கப்பட்டது.

சீர்வரிசை வழங்கப்பட்ட பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கிய நிகழ்வு சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்