முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக மத்திய அரசிடம், கேரள அரசு அனுமதி கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு இதனை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஷிவ்தாஸ் மீனாவுடன் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா சந்தித்து டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார். தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.