Rock Fort Times
Online News

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கேசவ அம்பலகாரன்தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 33). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சண்முகவள்ளிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த நாகராஜ், மனைவியை கண்டித்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சண்முகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் தங்கப்பொண்ணு வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்