தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி கமலா. இவர்களது மகன் முத்துச்சாமி . வளர்ப்பு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அவர்கள் நேற்று மாலை அதனை பட்டியில் அடைக்க சென்றனர். அப்போது தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து அவர்களை கடித்தது. இதில், அவர்கள் இருவரும் வலியால் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட கமலா, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். முத்துசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.