Rock Fort Times
Online News

மாநகராட்சி மேயர் உள்பட நகராட்சி பதவியில் உள்ளவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்கள். துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர், மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இதே போன்று நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2, 500 மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இம்மாதம் அதாவது 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்