லால்குடி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?* பரபரப்பு தகவல்கள்!
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார் (இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தவர்) இவர்
தொகுதி முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பகல் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எத்தனை லட்சம் இருந்தது என்பது முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த தகவலும் தெரிவிக்காமல் சென்று விட்டனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அவர்களிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.