திருச்சியில் மிதமான மழை…- வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி…! ( வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இன்று( ஏப்ரல் 3) அதிகாலை 4 மணி முதல் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை காலை 10-30 மணி வரை மிதமாக பெய்து கொண்டே இருந்தது. பின்னர், அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. குறிப்பாக டிவிஎஸ் டோல்கேட், கண்டோண்மென்ட், கே.கே.நகர், நம்பர் ஒன் டோல்கேட், மன்னார்புரம், உறையூர், தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டாலும் வெயிலின் கோர தாண்டவத்திலிருந்து தப்பித்ததில் சற்று நிம்மதி அடைந்தனர். இதேபோல திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Comments are closed.