Rock Fort Times
Online News

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரிப்பு: அமரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு…!

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காண்பித்துள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தியேட்டரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்