Rock Fort Times
Online News

திருச்சி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எல்.அடைக்கலராஜ் சகோதரர் எல்.பால்ராஜ் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் அஞ்சலி…!

திருச்சி நகராட்சி முன்னாள் சேர்மன் ஏ. எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளை இளைய மகனும், காங்கிரஸ் முன்னாள் எம்பி எல்.அடைக்கலராஜ் சகோதரரும், தொழிலதிபர்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோரின் சித்தப்பாவுமான எல்.பால்ராஜ் நேற்று( ஜூலை 28) உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று காலை திருச்சி கிராப்பட்டி ஸ்டேன்ஸ் அவென்யூ டி.எஸ்.எ. நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு எடத்தெருவில் உள்ள பழைய கோவிலில் இறுதி திருப்பலி நடந்தது. அதன் பின்னர் வேர் ஹவுஸ் குட்ஷெட் ரோடு ஆர்.சி. எம்.சி. கல்லறை தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன. முன்னதாக இன்று காலை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மறைந்த பால்ராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், திருச்சி மாவட்ட வியாபாரக் கழக தலைவர் எல்.ஞானராஜ், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் ரவி, அவரது சகோதரர் ரகு மற்றும் மாநகர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்யராஜ், ராஜகோபால், ஜவஹர், வக்கீல் இளங்கோ, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணா, முன்னாள் மேயர் சுஜாதா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திமுக மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் முத்து செல்வம், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், கள்ளிக்குடி சுந்தரம், ராஜா நசீர், அல்லூர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் பிரேம், ரகு, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் ஓவியர் கஸ்பார், ஜீவானந்தம், முகமது பாரூக், பாலமுருகன், சகாயராஜ், காமராஜ், ஸ்டீபன், ஜெரால்டு சகாபுதீன், அய்யாக்கண்ணு, அலெக்ஸ், கனகராஜ், ஜங்ஷன் பன்னீர்செல்வம், தர்மராஜ் மற்றும் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்