Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல…! 3- வது நீதிபதி தீர்ப்பு…

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று ( 14.07.2023 ) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. அமலாக்க துறை சட்ட விதிகளின்படி தான் கைது செய்துள்ளது என நீதிபதி சி.வி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்