திருச்சியில் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மைய கட்டிட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்…

திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில்
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மையக் கட்டிடத்திற்கான பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
