Rock Fort Times
Online News

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாள்தோறும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி  மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று ( 30.08.2023 ) காலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்தார். இதையடுத்து அவர் வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் உள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்