Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் கே.என்.நேரு விருப்ப மனு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த முறை கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. இந்தநிலையில் திமுக சார்பில் போட்டியிடுபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம்விருப்ப மனு அளித்தார். அப்போது பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பொருளாளர் துரைராஜ், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் கழக நிர்வாகிகள் மாத்தூர் கருப்பையா, காஜாமலை விஜய், டோல்கேட் சுப்பிரமணி உட்பட பலர் உடனிருந்தனர். அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்