திருச்சி, உறையூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய உத்தரவிட்ட அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உறையூரில் வசிக்கும் பொதுமக்களை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஜன. 19) நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அவற்றால் தாங்கள் பயன்பெற்று வருவது குறித்தும் அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். மேலும், திமுக அரசின் மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் மீதும் தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமாக, உறையூர் மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை அனைத்தையும் முழுமையாக கேட்டறிந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, அந்தக் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்க உத்தரவிட்டார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.