திருச்சி 58-வது வார்டு ரெங்கா நகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு… * கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 58- வது வார்டு ரெங்கா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பட்டா இன்றியும், சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு வசதி உள்ளிட்டவை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், கவுன்சிலர் கவிதா செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.