Rock Fort Times
Online News

பாஜகவை அகற்றக்கோரி நடை பயண இயக்கம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் நடை பயண இயக்கத்திற்கு திமுக துணை நிற்கும் என்று அமைச்சர் கே..என்.நேரு கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் “பிஜேபியை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உறையூர் குறத்தெருவில் இருந்து நடைபயணத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாநகர் மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளரும்,கவுன்சிலருமான சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

கூட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, முருகன், பார்வதி, அஞ்சுகம், சையதுஅபுதாகிர், ராஜா, ராஜலிங்கம், அண்ணாதுரை, திராவிட மண, இப்ராஹிம், முத்துலட்சுமி, கருணாகரன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், எத்திராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர், கவுன்சிலர் பைஸ் அகமது, விடுதலை சிறுத்தை கட்சி அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அபிபுர் ரஹ்மான், சிபிஐ மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், திமுக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், சிபிஐ. மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், செல்வகுமார், சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேற்கு பகுதி துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
நடைபயணத்தை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
கம்யூனிஸ்ட் கட்சிகள் தைரியமாக பாஜகவை அகற்றுவோம் என்று எதிர்த்து வருகிறது. இதற்கு திமுகவும் முழு ஆதரவை தரும். மேற்கு தொகுதியில் 6 நாட்கள் நடை பயணமாக சென்று மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இது வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். சமதர்ம சமுதாயம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த நடைபயண இயக்கத்திற்கு திமுக துணை நிற்கும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்