கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக, பேரூராட்சியாக இருந்த லால்குடியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் ஏற்கனவே இருந்த பழைய பேரூராட்சி அலுவலகத்திலேயே லால்குடி நகராட்சி அலுவலகம் செயல்பட்டது. இதனால், இட நெருக்கடியான சூழலில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் உள்ளாக்கப்பட்டனர். எனவே, லால்குடி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், லால்குடி -பூவாளூர் மெயின் ரோட்டில், நகராட்சி அலுவலகத்திற்கு ரூ. 4 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று (06-10-2024 )அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், தொழிலதிபர் பெருவை இன்ஜினியர் எஸ்.முருகவேல், ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு, துணைச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.