Rock Fort Times
Online News

திருச்சி, தில்லைநகரில் தி லைஃப்ட்ரீ பெண்கள் நலம் மற்றும் கருத்தரித்தல் சிறப்பு மருத்துவமனை-* அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, தில்லைநகர் மேற்கு கோட்டை ஸ்டேஷன் ரோடு பகுதியில் தி லைஃப் ட்ரீ பெண்கள் நலம் மற்றும் கருத்தரித்தல் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூலை 16) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, பொது மருத்துவர் சிவசுப்பிரமணியன், எம்டி சக்திவேல் சிவசுப்பிரமணியன், கருப்பை மற்றும் மகப்பேறு நிபுணர் ரிபானா பர்வீன், ஹோமியோபதி மருத்துவர் அபிராமி கார்த்திகேயன் மற்றும் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த மருத்துவமனையில் டீன்ஏஜ் பெண்களுக்கான ஹார்மோன் பிரச்சனைகள், கருவுறுதல் மற்றும் ஐவிப் சிகிச்சைகள், சினைப்பை, கருப்பைக்கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, மனநல ஆரோக்கியம் மற்றும் உறவு நலம், அழகு சாதன, மறு சீரமைப்பு மகளிர் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்கள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 84280 83280 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்