திருச்சி மாவட்டம் துறையூரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ 108.90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான துவக்க விழா இன்று ( 28.09.2023 ) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு கிளியனூர் அருகில் 5 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு துறையூர் நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 16,690 மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுமை அடையும். அதன் பிறகு துறையூர் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் ஐஏஎஸ்., சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.