தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்று (07-04-05) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி காலனி, எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. அதேபோல், அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பியுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
*

Comments are closed.