திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் கால்நடை மருத்துவமனை…* அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனு கொடுத்தார். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னுடைய திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், கால்நடைகள் வளர்ப்பையும் தங்களின் பொருளாதார ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனவே, அவ்விரு பகுதிகளிலும் தலா ஒரு கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து மக்களின் சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.