Rock Fort Times
Online News

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரிடம் ஆசி பெற்றார்…!

திருச்சி தேசிய கல்லூரியில் ‘உடற்கல்வி இயந்திர கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல்’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடனே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அமைச்சரை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் முனைவர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசி பெற்றார்.

அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமைச்சருக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில், எனது அரசியல் ஆசான் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் எனது முனைவர் பட்டத்திற்கான சான்றிதழை (Provisional Certificate) வழங்கி வாழ்த்துகள் பெற்றேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்