Rock Fort Times
Online News

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

தஞ்சையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வருகிற 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி ஒரு பக்கம் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என கூற முடியாது. அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் பொறுப்புடன் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே எத்தனை மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரத்தை தெரிவிப்போம். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். சில பகுதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றமும் செய்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் வகுப்புக்கு ஏற்கனவே ரூ.200 வசூல் செய்யப்பட்டது. தற்போது அந்தத் தொகையும் வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் எதற்காகவும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது. அதையும் மீறி வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்