திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைத்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பசியோடு கல்வி கற்க கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார் அதனை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டத்தை இன்று(26-08-2025) சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெல் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் நடுநிலைப்பள்ளி, துவாக்குடி என்ஐடியில் உள்ள மண்டல பொறியியற் கல்லூரி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். மாணவ, மாணவிகளுக்கு கேசரி, பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பூ மற்றும் அரசு அலுவலர்களும், கட்சி பிரதிநிதிகளும், பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Comments are closed.