தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, நூர்கான், சரோஜினி மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.