திருச்சியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்…!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (06.09.2025) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா-சுகந்தி தம்பதியரின் மகள் 12 வயது கார்த்திகா உயிரிழந்தார். இந்நிலையில் இன்று (செப்.25) அந்த வீட்டிற்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதி உதவி வழங்கினார். அப்போது கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், பகுதிச் செயலாளர் ஆர்.ஜி.பாபு, வட்டக் கழகச் செயலாளர் மனோகர், மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.