Rock Fort Times
Online News

எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ஒட்டி திருச்சியில் அதிமுக பொதுக்கூட்டம்- முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பங்கேற்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடமலைப்பட்டி புதூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், ஜெ.பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோரும் பேசினர். கூட்டத்தில், துணைச் செயலாளர் ஜோதிவாணன்,
மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்டச் துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பரமசிவம், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், அன்பழகன், சுரேஷ்குப்தா, ரோஜர், ஏர்போர்ட் விஜி, ஜெ.பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, வக்கீல் அணி துணைத் தலைவர் முத்துமாரி, வட்டச் செயலாளர்கள் கே.சி.பி.ஆனந்த், வசந்தம் செல்வமணி, அமீர் பாஷா, சிங்கார வேலன், கிராப்பட்டி கமலஹாசன், சரவணன், பாலு மகேந்திரன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் எனர்ஜி அப்துல் ரகுமான், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அக்பர் அலி, உறையூர் சாதிக், உறந்தை மணிமொழியன், சக்கரவர்த்தி, நாட்ஸ சொக்கலிங்கம், இன்ஜினியர் ரமேஷ், மார்க்கெட் பிரகாஷ், ஒத்தக்கடை மகேந்திரன், டிபன் கடை கார்த்திகேயன், கருமண்டபம் சுரேந்தர், மாணவரணி ரஜினிகாந்த், உடையான்பட்டி செல்வம், கே.பி.ராமநாதன், தென்னூர் ஷாஜகான், ரமணி லால் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் சி.முத்துமாரி நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்