தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ம் தேதி வணிகர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி 40வது வணிகர்கள் தின வணிக உரிமை முழக்க மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்…
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோட்டில் மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ள 40 வது மாநாட்டில் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்
30 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வணிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்று உடனடியாக ரத்து செய்தார். அவருக்கு இந்த வணிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதேபோல் ஆங்காங்கே வணிக நிறுவனங்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக எடுக்கப்படுவதால் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மார்க்கெட்டுகள் ஆங்காங்கே இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது மீண்டும் அந்த மார்க்கெட்டை கட்டி கடைகள் ஒதுக்கப்படும் போது பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த மாநாட்டின் வாயிலாக வணிகர்களின் பாதுகாப்பிற்கான பிரகடனம் அறிவிக்கப்பட உள்ளது என்றார்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு விளக்க உரை ஆற்றினார். மேலும் மாநில கூடுதல் செயலாளர் சண்முகநாதன், மாநில துணைத்தலைவர்கள், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்