ரூ.50 லட்சம் பரிசுத்தொகையுடன் மெகா கலைத்திருவிழா: திருச்சி, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலை. நடத்துகிறது…!
திருச்சி, சமயபுரம் டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, சட்டப்படிப்பு, நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் தனித்திறனை வெளிகாட்டும் வகையில் ரூ.50 லட்சம் பரிசுத்தொகையுடன் மெகா கலைத்திருவிழாவை தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் நடத்துகிறது. வருகிற மார்ச் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஜெனிக்ஸ் 2கே26 ” என்கிற தனித்திறன் போட்டியில் மாணவர்கள் பங்கேற்று நடனம், இசை, பாட்டு, மேக்கப், மெகந்தி, ஹேண்ட் ரைட்டிங், போட்டோகிராஃபி, குறும்படம், மீம்ஸ், ரீல்ஸ் ஆகிய பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளி காட்டலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசை வெல்லும் வாய்ப்பு உள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.