ம.தி.மு.க. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தொண்டர்கள் அடாவடி- *தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்…! (வீடியோ இணைப்பு)
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, தொண்டர்கள் எழுந்து கலைந்து செல்ல தொடங்கினர். அதனை, படம் பிடித்த செய்தியாளர்களை பார்த்த வைகோ மேடையில் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அங்கிருந்த தொண்டர்களிடம் செய்தியாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை பறிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ம.தி.மு.க தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக தொண்டர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.