திருச்சி மாநகராட்சி 5-வது மண்டலத்திற்கு உட்பட்ட 27-வது வாா்டு மூலைகொல்லை தெரு மாநகராட்சி உருது பள்ளியில் ரூ.6 வட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் ஜெனரல் பஜார் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் கட்டிட பணிகளை மேயர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாபுசெட்டி தெருவில் நியாய விலை கடை கட்டுவதற்கான இடத்தினையும், 26-வது வார்டு ராமலிங்க நகர் 2வது, 3-வது மற்றும் 4- வது தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், சாலையை தரமாக அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, “எனது குப்பை எனது பொறுப்பு” எனும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மண்டலம் 5க்குட்பட்ட 13 வார்டுகளில் கழிவுகளை தரம் பிரித்தல் குறித்தும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து , துணிப்பை பயன்படுத்த
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 15 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 2-வது வார்டு ஆர்.சி.பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை மேயர் பார்வையிட்டார். ஆய்வின்போது மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் பிரசாத் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.