சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று ( 09.09.2023 ) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, தொடங்கிய மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் தொடங்கி வைத்தார். இதில், 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர். இதில், ஆடவர் பிரிவில் முதலாவது இடத்தை தேசிய கல்லூரியை சேர்ந்த கார்த்தியும், இரண்டாவது இடத்தை புனித வளனார் கல்லூரியைச் சேர்ந்த தாராகாந்த் ஆகியோர் பிடித்தனர். மகளிர் பிரிவில் முதல் இடத்தை சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீதாஞ்சலியும், இரண்டாவது இடத்தை தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவி சுருதியும் பிடித்தனர். இதில், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.10,000, ரூ. 7000, ரூ. 5000 மற்றும் ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.