திருச்சி ஓலையூரில் இருந்து முடிகண்டம் செல்லும் சாலையின் அருகில் ஒரு வயலில் மாமரத்தின் அடியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மணிகண்டம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் .போலீசை பார்த்ததும் அந்த கும்பல் ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்றது. அவர்களை போலீஸ் படையினர் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூட்டுக் கொள்ளை அடிப்பதற்கு திட்டமிட்டு இருந்ததும், கொள்ளை அடிப்பதற்கான தடயத்துடன் ஆயுதங்களோடு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இதை ஒப்புக் கொண்டனர் .இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் இரும்பு ராடு, இரும்பு கம்பி, சுத்தியல், அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி ஓலையூரைச் சேர்ந்த ஜெய்சங்கர், குழந்தை ராஜ் ,திருமலை சமுத்திரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற லோகநாதன் ,மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த வீரன், வினோத் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.