திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல இடங்களில் இயங்கிவந்த எல்ஃபின் நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும், நிலம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்தது. இந்தவழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய முகவரான தொட்டியம் மகேந்திரமங்கலம் குடித்தெருவைச் சேர்ந்த ரா. சந்திரசேகரை (58) திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். எல்ஃபின் இ.காம் பிரைவேட் லிமிடெட் ஸ்பேரோல் குளோபல் டிரெடு திருச்சி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தோர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.