தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஷேக் உசேன் என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரி சோதனை செய்தார். அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது ஷேக்உசேன் தன்னுடைய பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி, இடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்று அதில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் உசேனை கைது செய்துள்ளனர்.
Comments are closed.