Rock Fort Times
Online News

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். அவர்களின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டில் பெயர் குமார் (வயது 54) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என்று இருந்தது. இருந்தபோதிலும் அந்தப் பயணியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவரது உண்மையான பெயர் கண்ணன் (50). மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்