மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்கிற பெயரில் புதுக் கட்சி தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று( பிப்.28) நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவராக மல்லை சத்யா, பொதுச் செயலாளராக கராத்தே பழனிசாமி, பொருளாளராக வாசுகி பெரியார் தாசன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு திராவிட வெற்றி கழகம் ஆதரவை தெரிவித்துக் கொள்வது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.