Rock Fort Times
Online News

போலீசாருக்கு வார விடுமுறை கட்டாயமாக கொடுங்க…* திருச்சி சிட்டி கமிஷனர் காமினி அறிவுறுத்தல்! (ஆடியோ இணைப்பு)

தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு வார விடுமுறை வழங்காமல் தொடர்ந்து பணி ஒதுக்கப்படுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு வார விடுமுறை கட்டாயமாக கொடுங்கள் என்று திருச்சி சிட்டி கமிஷனர் காமினி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், மாநகர பகுதிக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் பணி புரியும் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என புகார் வருகிறது. இனி வரும் காலங்களில் அது போன்ற புகார்கள் வருவதற்கு இடம் தராமல் வார விடுமுறை வழங்க வேண்டும். வார விடுமுறை தருவதில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும். காவல்துறை துணை ஆணையர்கள்(DC) வார விடுமுறை வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும். உதவி ஆணையர்கள் (AC) இதனை உறுதி செய்ய வேண்டும். இவ்வாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இன்றைய தேதி வரை யார் யாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை என்னிடம் தெரிவிக்க வேண்டும். காவலர்களுக்கு கண்டிப்பாக வார விடுமுறை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை நாம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஆயுதங்களுடன் (துப்பாக்கியுடன்) ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்