பொறியியல் பணிகள் காரணமாக கரூர், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் வரும் 13ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு., திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி -கரூர் பயணிகள் ரயில்கள் (76810, 76809), ஈரோடு -திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில்கள் (56810, 56105), சேலம் -மயிலாடுதுறை -சேலம் விரைவு ரயில்கள் (16811, 16812) வரும் 13ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 13ம் தேதி திருச்சி – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஈரோடு -கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு டவுன் திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 13ம் தேதி திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு டவுன் – கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் காரைக்கால் – எர்ணாகுளம் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் (16187) வரும் 13ம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிர்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படும்.
Comments are closed.