மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் பெட்டியில் இருந்தவர்கள் டீ தயாரித்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். ஒரு பெட்டியில் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளும் எரிந்து நாசமாயின. உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்தபோது இந்த தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக் சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.