திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் உள்ள ஜெனரல் பஜார் சந்திப்பில் இருந்து பட்டாபிராமன் சாலை மாருதி மருத்துவமனை வரை உள்ள சாலையின் நடுவே நீண்ட பள்ளங்கள் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே , இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதிக்குழு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பள்ளங்களுக்கு வெள்ளை துணி போர்த்தி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சிபிஎம் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது, தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வம், மூத்த தோழர் பழனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆசிக் அலி, ஷேக் மொய்தீன், கையூம், மோகன், கிளை செயலாளர்கள் சுப்பிரமணி, அக்பர் அலி, செல்வம் ஆகியோர் இன்று (ஏப்ரல் 29) ஒன்று திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஊழியர்கள் மூலம் உடனடியாக பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Comments are closed.