லால்குடி,பல்லபுரம் சவேரியார் ஆலய திருவிழாவில் 1500 பேருக்கு அன்னதானம்- இன்ஜினியர் எஸ்.முருகவேல் தாராளம்….!
மதங்களைக் கடந்த மனித நேயத்திற்கு மக்கள் பாராட்டு!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள பல்லபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்த ஊர் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது.மே 4ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது.
இதில், திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், இ.டூ.ஜி இன்ஜினியரிங் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்-ன் முதன்மை செயல் அதிகாரியுமான இன்ஜினியர் எஸ்.முருகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பிறப்பால் தான் ஒரு இந்துவாக இருந்தாலும் ஜாதி மதங்களை புறம் தள்ளிவிட்டு, புனித சவேரியார் ஆலய தேர் திருவிழாவில் கலந்து கொண்ட சுமார் 1500 பேருக்கு தன் சொந்த செலவில் அன்னதானம் வழங்கியுள்ளார்.
இது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Comments are closed.