திருச்சி கண்டோன்மெண்ட் அருகே பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் சித்திரை விஷு, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மேலும் நாளை ( 08.12.2023 ) கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. நேற்று ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரமான உத்தரத்தை முன்னிட்டு மகா அன்னதானம் நடந்தது. இக்கோவிலில் ஏற்கனவே 4 முறை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது 5-வது முறையாக நடக்கிறது. இன்று பூர்வாங்க பூஜையின் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணிக்குமேல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ஐயப்ப சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.