Rock Fort Times
Online News

KSR பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்

தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் வேளாங்கண்ணி இடையே பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு கட்டண ரயில்களை அறிவித்துள்ளது என்று தென்னக ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில் எண். 06547 கே.எஸ்.ஆர் பெங்களூரு – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் கே.எஸ்.ஆர். பெங்களூரில் இருந்து இம்மாதம்
25 ஏப்ரல் 01, 08 , 15 ஆகிய சனிக்கிழமைகளில் காலை 07.50 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணிக்கு இரவு 08.30 மணிக்கு வந்து சேரும்.திரும்பும் திசையில் ரயில் எண். 06548 வேளாங்கண்ணி – கேஎஸ்ஆர் பெங்களூரு வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் இம்மாதம் 25, ஏப்ரல்01, 08 மற்றும் 15 ஆகிய சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். கேஎஸ்ஆர் பெங்களூருவை மறுநாள்மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்,பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர்,
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம். ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து வரும் இந்த ரயில் மாலை 16.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. மீண்டும் 16 .55 மணிக்கு தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதேபோன்று மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமை இரவு 23 .55 க்கு புறப்படும்  இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3. 10 மணிக்கு திருச்சிக்கு வந்து 3. 25 மணிக்கு கரூர் வழியாக பெங்களூர் புறப்பட்டு செல்கிறது 13- ஏசி மூன்று அடுக்குப் பெட்டிகள், 7- ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள் ப 2- லக்கேஜ் கம்பிரேக் வேன்கள் என மொத்தம்:22 பெட்டிகள் இடம்பெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்