கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்தது: திருச்சி மாநகராட்சி வார்டு 1 முதல் 7 வரை தினமும் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம்…!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் 1 முதல் 7 வரை உள்ள பகுதிகளுக்கு காலை 5 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் இருவேளை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீரேற்று நிலையத்திலிருந்து மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர்செய்யும் வரை வார்டு எண் 1 முதல் 7 வரை உள்ள பகுதிகளுக்கு காலை 5 மணி முதல் 8 மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் , குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.