நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பங்களாவில், கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT…👇

Comments are closed.