Rock Fort Times
Online News

கேரளா ஓணம் பம்பர்: கோவையை சேர்ந்தவருக்கு ரூ.25 கோடி பரிசு…

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் கேரளா செல்லும்போது கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கேரளா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் 5000 ரூபாய்க்கு கேரளா ஓணம் பம்பர் 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். இதற்கான குழுக்கள் நேற்று நடைபெற்றது. அதில் TE 230662 என்ற எண் கொண்ட ஒரு சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இந்த சீட்டை நடராஜன் வாங்கியுள்ளார். இதன்மூலம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன் கோடீஸ்வரராகி உள்ளார்.  மேலும், இதே ஓணம் பம்பரில் 20 பேருக்கு ஒரு கோடி பரிசு மற்றும் இதர பரிசுகள் பல பேருக்கு விழுந்துள்ளன. ஏற்கனவே, கேரள மாநிலத்தில் துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய பம்பர் சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்