Rock Fort Times
Online News

சிறுகனூர் அருகே சாலை விபத்தில் கேரள வாலிபர் பலி…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை பகுதியில் இன்று ( 21.08.2023 ) அதிகாலை 5 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளின் முன் பகுதி நொறுங்கியது. இந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர், கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த அனுராக் சங்கரன் குட்டி என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், மோட்டார் சைக்கிளிலேயே சொந்த ஊர் செல்வதற்காக திருச்சி வழியாக சென்றதும், கொணலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்