Rock Fort Times
Online News

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார், கதிரவன் எம்.எல்.ஏ…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலசீதேவிமங்கலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் நம்பர் -1 டோல்கேட் பகுதியில் கட்டப்பட்ட பொது கழிவறை கட்டிடம் ஆகியவற்றை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணை பெருந்தலைவர், நகர செயலாளர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழாவுக்கு கதிரவன் எம்.எல்.ஏ. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்